பிரபல கொரிய நடிகை திடீர் மரணம்

ஜெஜூ தீவு: பிரபல கொரிய நடிகை பார்க் சூ ரியன் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்தார். அவருக்கு வயது 29. ஜெஜூ தீவில் நிகழ்ச்சி நடத்துவதற்காக சென்ற அவர் படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்ததில் துரதிர்ஷ்டவசமான விபத்து ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் வரும் திங்கள்கிழமை நடைபெறும். இன்று அவரது இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரபல கொரிய நடிகை திடீர் மரணம் appeared first on Dinakaran.

Related Stories: