சீனாவின் டிராகன் படகு போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்ற வீரர், வீராங்கனைகள்..!!

சீனாவில் யான்செங் நகரில் பாரம்பரிய டிராகன் படகு போட்டி உற்சாகமாக நடைபெற்றது. 38 அணிகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் டிராகன் படகு போட்டியில் பங்கேற்றனர். 100 மீட்டர், 200 மீட்டர், 500 மீட்டர் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. 3 பிரிவுகளிலும் புஸோசெங்கில் என்ற டிராகன் படகு குழு ஆடவர் அணி முதல் இடம் பெற்றது. அதேபோல மகளிர் பிரிவில் ஜிங்குவா, லயோசிங் பல்கலைக்கழகம் ஆகிய அணிகள் பரிசுகளை தட்டி சென்றனர். 2500 ஆண்டுகள் பழமையான டிராகன் படகு திருவிழா சீனாவில் ஆண்டுதோறும் விமர்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

The post சீனாவின் டிராகன் படகு போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்ற வீரர், வீராங்கனைகள்..!! appeared first on Dinakaran.

Related Stories: