தோனி மட்டுமே தனியாக விளையாடி 2007 டி20 உலகக்கோப்பையை வென்றாரா? :ட்விட்டர் பதிவுக்கு ஹர்பஜன் சிங் ரிப்ளை

சென்னை : 2007 டி20 உலகக்கோப்பை வெற்றி தோனியால்தான் சாத்தியமானது என்ற ட்விட்டர் பதிவுக்கு ஹர்பஜன் சிங் ரிப்ளை அளித்துள்ளார். 2007 டி20 உலகக்கோப்பை வெற்றி குறித்து ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பயிற்சியாளர் இல்லை, ஆலோசகர் இல்லை, இளம் வீரர்கள், பெரும்பாலான மூத்த வீரர்கள் பங்கேற்க மறுப்பு, கேப்டன்சி அனுபவம் என எதுவும் இல்லை. இதற்கு முன் எந்த ஒரு போட்டியிலும் கேப்டனாக இருந்ததில்லை. ஆனால், கேப்டனான 48 நாட்களில் இளம் வீரர்களுடன் சென்று ஆஸ்திரேலிய அணியை அரையிறுதியில் வீழ்த்தி, டி20 உலகக்கோப்பையும் வென்றார் கேப்டன் தோனி என்று கருத்து பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்து கோபமடைந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், அந்த ட்விட்டை டேக் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.அவர் வெளியிட்ட பதிவில்,”தோனி என்ற இளம் வீரர் மட்டுமே தனியாக விளையாடி 2007 டி20 உலகக்கோப்பையை வென்றாரா? அணியில் பிற 10 வீரர்கள் விளையாடவில்லையா? அவர் மட்டுமே விளையாடி எல்லா உலகக்கோப்பைகளை வென்றாரா? ஆஸ்திரேலியா அல்லது வேறு நாடுகள்உலகக்கோப்பையை வென்றால், அந்த நாடு வென்றது என தலைப்புச் செய்தி ஆகிறது; ஆனால் இந்தியா வென்றால் மட்டும், அதை கேப்டனின் வெற்றியாக பார்க்கிறார்கள்; வெற்றியோ தோல்வியோ, அது ஒட்டுமொத்த அணிக்கும் சொந்தம்!,’ எனப் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே “தோனி தனியாக விளையாடி உலகக்கோப்பைகளை |வென்றாரா?” என ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ள நிலையில், தோனியின் கேப்டன்சியை புகழ்ந்து முந்தைய காலங்களில் ஹர்பஜன் சிங் பதிவிட்ட ட்வீட்களை பகிர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.தொடர் வெற்றிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது கேப்டன்களை மட்டும் |TAG செய்து வாழ்த்து தெரிவித்த ட்வீட்களும் வைரலாகி வருகின்றன.

The post தோனி மட்டுமே தனியாக விளையாடி 2007 டி20 உலகக்கோப்பையை வென்றாரா? :ட்விட்டர் பதிவுக்கு ஹர்பஜன் சிங் ரிப்ளை appeared first on Dinakaran.

Related Stories: