பொது மருத்துவ கலந்தாய்வை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பொது மருத்துவ கலந்தாய்வை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியின் போது தெரிவித்தார். பொது கலந்தாய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஏற்கனவே ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அகில இந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தப்பட்டால் தமிழ்நாடு மாணவர்களுக்கான முன்னுரிமை பறிபோகும் என்றும் அதிகளவு மருத்துவ கல்வி இடங்களை வைத்துள்ள தமிழ்நாட்டில் தமிழர்கள் அல்லாத மாநிலங்களை சேர்ந்தவர்களும் பயன்பெறுவர் மேலும் ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து கடும் எதிர்ப்பை தெரிவிக்க உள்ளோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

The post பொது மருத்துவ கலந்தாய்வை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Related Stories: