சென்னை – ஆவடி, திருவள்ளூர் இடையே மின்சார ரயில்கள் ரத்து

 

சென்னை, ஜூன் 11: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில்: பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில் செயல்பாடுகளின் பாதுகாப்பு முன்னுரிமை அளித்து நடந்துவரும் பராமரிப்பு பணியின் ஒரு பகுதியாக சென்னை சென்ட் ரல் – அரக்கோணம் பிரிவில் பேசின் பிரிட்ஜ் – வியாசார்பாடி ஜீவா ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று இரவு 11.30 மணி முதல் நாளை விடியற்காலை 3 மணி வரை லைன்பிளாக் மற்றும் சிக்னலிங் பிளாக் செய்யப்படுகிறது. மற்றும் நாளை மறுநாள் (13ம் தேதி) இரவு 11.30 மணி முதல் 14ம் தேதி விடியற்காலை 4.50 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புறநகர் மின்சார ரயில்களில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, முழுவதுமாக ரத்து செய்யப்படும் ரயில்கள்: மூர்மார்க்கெட் – பட்டாபிராம் சைடிங் இடையே இரவு 10.35 மணிக்கு இயக்கப்படும் (ரயில் எண்43127),மூர் மார்க்கெட் – ஆவடி இடையே இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் (ரயில் எண் 66007), பட்டாபிராம் சைடிங் – மூர் மார்க்கெட் இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் (ரயில் எண் 43892), ஆகிய ரயில்கள் இன்று (11ம் தேதி) மற்றும் நாளை மறுநாள்(செவ்வாய்) அன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதே போல், சென்னை கடற்கரை – அரக்கோணம் இடையே நள்ளிரவு 1.20 மணிக்கு இயக்கப்படும் (ரயில் எண் 43801), மூர்மார்க்கெட் – திருவள்ளூர் இடையே அதிகாலை 5.40 மணிக்கு இயக்கப்படும் (ரயில் எண் 43205), திருவள்ளூர் – மூர்மார்க்கெட் இடையே அதிகாலை 4.45 மணிக்கு இயக்கப்படும் (ரயில் எண் 43204),பட்டாபிராம் சைடிங் – மூர்மார்க்கெட் இடையே அதிகாலை 5.30 மணிக்கு இயக்கப்படும் (ரயில் எண்43104) ஆகிய ரயில்கள் 12ம் தேதி நாளை (திங்கள்) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மூர்மார்க்கெட் – பட்டாபிராம் சைடிங் இடையே அதிகாலை 4.15 மணிக்கு இயக்கப்படும் (ரயில் எண் 43101), ஆவடி – மூர்மார்க்கெட் இடையே அதிகாலை 3.50 மணிக்கு இயக்கப்படும் (ரயில் எண் 43002), ஆகிய ரயில்கள் நாளை(திங்கள் கிழமை) மற்றும் 14ம் தேதி (புதன்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
பட்டாபிராம் சைடிங் – மூர் மார்க்கெட் இடையே அதிகாலை 3.20 மணிக்கு இயக்கப்படும் (ரயில் எண் 43102), ஆவடி – மூர்மார்க்கெட் இடையே அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் (ரயில் எண் 43004) ஆகிய ரயில்கள் 14ம் தேதி( புதன்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. பகுதியாக ரத்து: பட்டாபிராம் சைடிங் – மூர்மார்க்கெட் இடையே இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் (ரயில் எண்43132) பட்டாபிராம் சைடிங் பதிலாக ஆவடி – மூர்மார்க்கெட் இடையே இன்று மற்றும் நாளை மறுநாள் இயக்கப்படும். அரக்கோணம் – வேளச்சேரி இடையே அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் (ரயில் எண்43932) நாளை சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும்.

அதே போல்,மூர் மார்க்கெட் – திருவள்ளூர் இடையே அதிகாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் (ரயில் எண் 43201) நாளை மற்றும் நாளை மறுநாள் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். மூர் மார்க்கெட் – திருவள்ளூர் இடையே அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் (ரயில் எண் 43501) திருவள்ளூருக்கு செல்லாமல் ஆவடி ரயில் நிலையம் வரை மட்டுமே 14ம் தேதி இயக்கப்படும். புறப்படும் இடம் மாற்றம்: மூர்மார்க்கெட் – ஆவடி இடையே இரவு 11.45 மணிக்கு இயக்கப்படும் (ரயில் எண்43025) மூர்மார்க்கெட் பதிலாக சென்னை கடற்கரையிலிருந்து இன்று மற்றும் நாளைமறுநாள் புறப்படும்,அதே போல் மூர்மார்க்கெட் – ஆவடி இடையே நள்ளிரவு 12.5 மணிக்கு இயக்கப்படும் (ரயில் எண்43001) 12ம் தேதி (திங்கள் கிழமை மற்றும் புதன் கிழமை) சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும்.

The post சென்னை – ஆவடி, திருவள்ளூர் இடையே மின்சார ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: