பாடாலூரில் நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்க மாநாடு

 

பாடாலூர், ஜூன்11:ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் கோட்ட மாநாடு நேற்று நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் கோட்ட மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு அச்சங்கத்தின் கோட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். இணைச் செயலாளர்கள் மதியழகன், மணிவேல் ஆகியோர் முன்னில வகித்தனர். கோட்ட செயலாளர் சுப்பிரமணியன் அறிக்கை வாசித்தார். பொருளாளர் கருணாநிதி வரவு செலவு அறிக்கை சமர்பித்தார்.

மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில துணைத் தலைவர் மகேந்திரன், மாநில பொருளாளர் தமிழ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பொதுச் செயலாளர் அம்சராஜ் நிறைவுரை ஆற்றினார். இம்மாநாட்டில், சாலைப்பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவிட வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்கு தர ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின் பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிர் நீத்தோரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் விரைந்து பணி நியமனம் வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு ஊதியத்தில் பத்து சதவீதம் ஆபத்துப் படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post பாடாலூரில் நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்க மாநாடு appeared first on Dinakaran.

Related Stories: