வடக்குமாதவி கிராமத்தில் நுகர்வோர் பாதுகாப்பு துறை மக்கள் குறைதீர்நாள் கூட்டம்

 

பெரம்பலூர்,ஜூன்11: பெரம்பலூர் மாவட்ட உண வுப் பொருள் வழங்கல் மற் றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தொடர்பான பொது மக்கள் குறைதீர் நாள் கூட்டம் வடக்குமாதவி கிராமத் தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரம்ப லூர் வருவாய் கோட்டாட் சியர் நிறைமதி தலைமை தாங்கினார். பெரம்பலூர் வட்ட வழங்கல் அலுவலர் பெரியண்ணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் நியாய விலைக் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னனு குடும்ப அட்டை குடும்பஅட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோருக்கு அங்கீகார சான்றிதழ் வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைபடத்தை மாற்றம் செய்வதற்கு புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் என மொத்தம் 23 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. கூட்டத்தில் வருவாய்துறை அதிகாரிகள், உணவுபொருட்கள்வழங்கல் துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் கிராம பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post வடக்குமாதவி கிராமத்தில் நுகர்வோர் பாதுகாப்பு துறை மக்கள் குறைதீர்நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: