பாடாலூர் அருகே திம்மூரில் சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்

 

பாடாலூர், ஜூன்11: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா திம்மூர் கிராமத்தில் மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்திரவின்படி சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஆலத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். முகாமில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல்,

புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்ட குடும்ப அட்டை தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் திம்மூர் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணசாமி, கிராம உதவியாளர் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பாடாலூர் அருகே திம்மூரில் சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: