வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களின் வழக்குகளை உரிய காலத்தில் முடிக்க வேண்டும்: கலெக்டர் வலியுறுத்தல்

 

கரூர், ஜூன் 11: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பாக மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் இரண்டாம் காலாண்டு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களின் வழக்குகளை உரிய காலத்திற்குள் விசாரணை மேற்கொண்டு, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விரைந்து நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் நீதி பெற்றுத் தர வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கோட்டாட்சியர் ரூபினா, துணை கண்காணிப்பாளர் சரவணன், அக்பர்கான், தனித்துணை கலெக்டர் சைபுதீன், அரசு சிறப்பு வழக்கறிஞர் (எஸ்சி மற்றும் எஸ்டி) லட்சுமணன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

The post வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களின் வழக்குகளை உரிய காலத்தில் முடிக்க வேண்டும்: கலெக்டர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: