சந்தன மரம் வெட்டியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

 

மஞ்சூர்,ஜூன்11: நீலகிரி மாவட்டம் மஞ்சூர்-கோவை சாலையில் கெத்தை காப்புகாடுகள் உள்ளது. குந்தா வனச்சரகத்திற்குட்பட்ட இந்த காடுகளில் விலை உயர்ந்த மரங்கள்,தாவரங்கள், மூலிகை செடிகளுடன் சந்தன மரங்களும் அதிகளவில் உள்ளது. இந்நிலையில் கடந்த 2.2.2018 குந்தா வனத்துறையினர் கெத்தை, ஓணிக்கண்டி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது எல்.ஜி.பி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் அதில் சந்தன கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்தனர்.

வனத்துறையினர் சந்தன கட்டைகளுடன் ஜீப்பை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த திலீப் என்பவர் மீது வனத்துறையினர் வழக்குபதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் காப்பு காட்டில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய திலிப்புக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

The post சந்தன மரம் வெட்டியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: