அன்புமணி கண்டனம் எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கத்திற்காக 600 மரங்களை வெட்டுவதா?

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்திற்காக அப்பகுதியில் வளர்க்கப்பட்டுள்ள ஏறக்குறைய 600 மரங்களை வெட்ட முடிவு செய்து, அவற்றில் சுமார் 200 மரங்கள் வெட்டப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. பாதுகாக்கப்பட வேண்டிய மரங்களை வெட்டி வீழ்த்துவது எந்த வகையிலும் நியாயமல்ல.

எழும்பூர் ரயில் நிலைய நவீனமயமாக்கலுக்காக வெட்டப்பட இருக்கும் மரங்களின் எண்ணிக்கையை குறைத்தல், வெட்டப்படும் மரங்களை வேறு இடங்களில் நட்டு வளர்த்தல், வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையை விட 10 மடங்கு மரக்கன்றுகளை நட்டு வளர்த்தல் ஆகிய மாற்று வழிகளில் சாத்தியமானவற்றை ரயில்வேத்துறை செயல்படுத்த வேண்டும். இதை ரயில்வேயிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

The post அன்புமணி கண்டனம் எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கத்திற்காக 600 மரங்களை வெட்டுவதா? appeared first on Dinakaran.

Related Stories: