90% பணிகள் நிறைவு; மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக அடுத்த மாதம் அறிக்கை தாக்கல்..!

சென்னை: மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான அறிக்கை அடுத்த மாதம் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ரூ.8,500 கோடியில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மதுரை மெட்ரோ ரயில் திட்ட சாத்தியக்கூறு அறிக்கை சமீபத்தில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான அறிக்கை தயாரிக்க ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனத்துக்கு மார்ச் 28-ல் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

75 நாட்களுக்குள் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் விரைவில் மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளது. ரூ.9,424 கோடி 45 கி.மீ. தொலைவுக்கு மதிப்பில் கோவை மெட்ரோ ரயில் திட்டம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. அவிநாசி சாலை முதல் கருமத்தம்பட்டி வரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உக்கடம் முதல் சத்தியமங்கலம் சாலை வலியம்பாளையம் பிரிவு வரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

The post 90% பணிகள் நிறைவு; மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக அடுத்த மாதம் அறிக்கை தாக்கல்..! appeared first on Dinakaran.

Related Stories: