ஆம்னி பஸ்சில் நர்சிடம் சில்மிஷம்: வாலிபர் கைது

கோவை: நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவர், கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தலைமை நர்சாக பணிபுரிகிறார். சில நாட்களுக்கு முன்பு இவர், விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சென்றார். விடுமுறை முடிந்ததால் அந்த நர்சு, நாகர்கோவிலில் இருந்து கோவை வந்த ஆம்னி பஸ்சில் நேற்று முன்தினம் ஏறி வந்தார்.அப்போது, நர்சின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த வாலிபர் ஒருவர் இரவில் நர்சிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால், நர்சு சத்தம் போட்டார். இதுகுறித்து கண்டக்டரிடம் தெரிவித்தார். அவர், சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை கண்டித்தார்.

ஆனால், அதையும் மீறி வாலிபர் தொடர்ந்து நர்சிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.இந்த நிலையில் காலையில் பஸ், காந்திபுரம் வந்ததும் இதுகுறித்து நர்சு அளித்த புகாரின்பேரில் காட்டூர் போலீசார் வாலிபரை நேற்று கைது செய்து விசாரித்தனர். இதில் அவர், குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த கூலித் தொழிலாளி முருகன் (36) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஆம்னி பஸ்சில் நர்சிடம் சில்மிஷம்: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: