தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 48 கோயில்களின் பிரசாதங்கள் தபால் மூலமாக பெறும் திட்டம் துவக்கம்

ஈரோடு: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 48 கோயில்களின் பிரசாதங்கள் தபால் மூலமாக பெறும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களான பழனி பாலதண்டாயுதசுவாமி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் உட்பட 48 முக்கிய கோயில்களின் பிரசாதங்களை பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கெள்ளலாம்.

இந்து சமய அறநிலையத்துறையின் hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அதற்கு உண்டான தொகையை செலுத்தினால், கோயில்களின் பிரசாதமானது பதிவு செய்தவரின் வீட்டிற்கே விரைவு தபால் மூலம் வந்து சேரும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 48 கோயில்களின் பிரசாதங்கள் தபால் மூலமாக பெறும் திட்டம் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: