திருவள்ளூர் அருகே கொலை வழக்கில் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் 2016-ல் நடந்த கொலை வழக்கில் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார். கடந்த 2016-ல் கிருஷ்ணராஜ் என்பவர் இரும்பு ராடால் அடித்துக் கொல்லப்பட்டு நகைகள் திருடப்பட்டன. கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்த சண்முகம், 2017-ம் ஆண்டு முதல் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துவந்தார். வேளாங்கண்ணியில் பதுங்கி இருந்த சண்முகத்தை, குற்றப்பிரிவு ஆய்வாளர் டில்லிபாபு தலைமையிலான போலீஸ் கைது செய்தது.

The post திருவள்ளூர் அருகே கொலை வழக்கில் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: