திருச்சியில் முதலமைச்சரின் பயணத்தின் போது தனது கல்விக்கு உதவுமாறு கேட்டுக் கொண்ட சிறுமி குடும்பத்துக்கு வீடு ஒதுக்கீடு..!!

திருச்சி: திருச்சியில் முதலமைச்சரின் பயணத்தின் போது தனது கல்விக்கு உதவுமாறு கேட்டுக் கொண்ட சிறுமி குடும்பத்துக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் கோவையில் வீடு ஒதுக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார். கோவை சிங்காநல்லூர் என்.கே.ஜி. நகரைச் சேர்ந்த கவிதா, அவரது மகள் காவ்யா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்தனர். தனது கணவர் இறந்துவிட்ட நிலையில் அவரது பெயரில் உள்ள சொத்தை விற்பனை செய்ய முடியாமல் இருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post திருச்சியில் முதலமைச்சரின் பயணத்தின் போது தனது கல்விக்கு உதவுமாறு கேட்டுக் கொண்ட சிறுமி குடும்பத்துக்கு வீடு ஒதுக்கீடு..!! appeared first on Dinakaran.

Related Stories: