சென்னை: வரும் கல்வியாண்டில் பாடங்களை விரைவாக முடிக்க சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பள்ளிகளை திறக்க தாமதம் ஏற்படுவதால் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும். தேசிய அளவிலான போட்டியில் மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும். போட்டி குறித்த முறையான தகவல் வரவில்லை; 9க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பங்கேற்கவில்லை என்று அமைச்சர் அன்பில் தெரிவித்தார்.
The post வரும் கல்வியாண்டில் பாடங்களை விரைவாக முடிக்க சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்த திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி appeared first on Dinakaran.