கணவர் இறந்த விரக்தியில் மனைவி தற்கொலை

 

ஈரோடு, ஜூன் 10: கோபி அடுத்துள்ள திட்டம்பாளையம் அயலூர் பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி (29). இவரது கணவர் வேலுசாமி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்து ஒன்றில் சிக்கி இறந்து விட்டார். 2 பெண் குழந்தைகளை வைத்து குடும்பம் நடத்தி வந்த முத்துலட்சுமி, தனது கணவர் இழந்த துயரத்தை நினைத்து மனவிரக்தியில் இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 31ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தோட்டத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி முத்துலட்சுமி இறந்தார். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post கணவர் இறந்த விரக்தியில் மனைவி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: