கர்நாடக பள்ளி பாடப்புத்தகத்தில் இந்தாண்டே திருத்தம்: கல்வித்துறை அமைச்சர் தகவல்

பெங்களூரு: கர்நாடக பள்ளி பாடத்திட்டத்தில் இந்தாண்டே திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மதுபங்காரப்பா தெரிவித்தார். இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது, ‘ பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் இந்தாண்டே திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா விருப்பம் தெரிவித்துள்ளார். பாஜ ஆட்சியில் பள்ளி பாடத்தில் சில பாடங்களை நீக்கி தேசிய கல்வி கொள்கைக்கு வழி வகை செய்தது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மாணவர்களின் விருப்பத்துக்கு தகுந்தாற்போன்று பள்ளி பாடத்தில் திருத்தம் செய்யப்படும் என்று கூறியிருந்தோம்.

எப்படி இலவச கேரண்டிகளை அமல்படுத்துகிறோமோ, அதே போன்று துறை ரீதியான மாற்றங்களையும் நிறைவேற்றுவோம். இந்தாண்டே பாடங்களில் திருத்தம் செய்யப்பட்டு மக்களுக்கு துணை நூலாக வழங்குவோம். இதனால் மாணவர்களுக்கு எந்த சுமையும் கிடையாது. இன்னும் பள்ளிகளில் பாடத்திட்டப்படி வகுப்புகள் தொடங்கவில்லை. எனவே அதற்கான நேரம் இருக்கிறது. என்ன பாடம் எடுக்க வேண்டும். எது வேண்டாம் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படும். இந்த வழிமுறைகள் நிறைவடைந்ததும் முதல்வரின் வழிகாட்டுதலின்படி அமைச்சரவை கூட்டத்தில் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்படும். ஆர்எஸ்எஸ் நிறுவனர் பலிராம் ஹெக்டேவார் பாடம் நீக்கப்படும்’ என்றார்.

The post கர்நாடக பள்ளி பாடப்புத்தகத்தில் இந்தாண்டே திருத்தம்: கல்வித்துறை அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: