காங்கிரஸ் எத்தனை சதவீத ஆட்சி? அரசு அதிகாரிகள் இடமாற்றம் வசூல் ஜோராக நடக்கிறது: முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது, ‘ பாஜ ஆட்சியின் போது ஒவ்வொரு அதிகார பதவிக்கும் ஒவ்வொரு விலை பட்டியல் இருந்தது. தற்போது அதே மாதிரி காங்கிரஸ் ஆட்சியிலும் ஒவ்வொரு அதிகார பதவிக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் பணியிட மாற்றத்திற்கு தனி பட்டியல் தயாரிக்கப்பட்டு வசூல் நடந்து வருகிறது.

பாஜ ஆட்சியின் போது ‘பே சிஎம்’ என காங்கிரசார் சுவர்களில் போஸ்டர் ஒட்டி பிரசாரம் மேற்கொண்டனர். தற்போது அதே மாதிரி காங்கிரஸ் கட்சியில் நடந்து வருவதால் இதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டுமா? கடந்த பாஜ ஆட்சியில் வசூலிக்கப்பட்டதை விட அதிகமாக தற்போது காங்கிரஸ் ஆட்சியில் வசூல் நடக்கிறது. இத்தகைய காங்கிரஸ் அரசை எத்தனை சதவீதம் அரசு என அழைக்க வேண்டும்? ’ என்றார்.

The post காங்கிரஸ் எத்தனை சதவீத ஆட்சி? அரசு அதிகாரிகள் இடமாற்றம் வசூல் ஜோராக நடக்கிறது: முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: