திமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வரும் வாகனங்கள் நிறுத்த 4 இடங்கள் ஒதுக்கம்

சேலம், ஜூன் 10: சேலத்தில் இன்று (10ம் தேதி) நடக்கும் சேலம் மத்திய, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வருகை தரும் வாகனங்கள் நிறுத்த 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சேலம் மத்திய, கிழக்கு, ேமற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை செயலாளர்கள் பங்கு பெறும் செயல்வீரர்கள் கூட்டம், இன்று (10ம் தேதி) மாலை 4 மணிக்கு சேலம் 5 ேராட்டில் உள்ள ரத்தினவேல் ஜெயகுமார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இக்கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். இக்கூட்டத்திற்கு வரும் வாகனங்கள் மாவட்ட தொழில் மையம், கல்யாண் ஜூவல்லரி பின்புறம், ரிலையன்ஸ் மால் பின்புறம், முன்னாள் எம்எல்ஏ ஆர்ஆர் சேகரன் இடம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தகவலை சேலம் மத்திய, மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

The post திமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வரும் வாகனங்கள் நிறுத்த 4 இடங்கள் ஒதுக்கம் appeared first on Dinakaran.

Related Stories: