முதல் இன்னிங்சில் இந்தியா 296 ரன்னுக்கு ஆல் அவுட்டானது: 173 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது ஆஸ்திரேலியா!

ஓவல்: ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 29 ரன்களும், கே.எஸ். பரத் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எஸ். பரத் இன்று ரன் கணக்கை தொடங்காமல் நேற்றைய ரன்னிலேயே வெளியேறினார். அடுத்து ரகானே உடன் ஷர்துல் தாகூர் ஜோடி சேர்ந்தார். நேரம் செல்ல செல்ல சுதாரித்து விளையாட ஆரம்பித்தனர். மறுமுனையில் ரகானே சிறப்பாக விளையாடினார். ரகானே 92 பந்தில் அரைசதம் அடித்தார். இன்று ஆஸ்திரேலியாவின் பீல்டிங் சிறப்பாக அமையவில்லை. 4 கேட்ச்களை தவறவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் எல்.பி.டபிள்யூ. ஆகிய பந்து நோ-பால் ஆக வீசப்பட்டதால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரகானே 89 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர், ஷர்துல் தாகூர் அரைசதம் அடித்து 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உமேஷ் யாதவ் 5 ரன்களுக்கு, ஷமி 13 ரன்களுக்கு வெளியேறினர். இதனால் இந்தியா 296 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட், ஸ்டார்க், போலண்ட், கிரீன் தலா 2 விக்கெட், நாதன் லியோன் 1 விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

The post முதல் இன்னிங்சில் இந்தியா 296 ரன்னுக்கு ஆல் அவுட்டானது: 173 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது ஆஸ்திரேலியா! appeared first on Dinakaran.

Related Stories: