வறுமைகளை நீக்கி ஐஸ்வரியம் அருளும் ராஜராஜேஸ்வரி அம்மன் விரத வழிபாடு..!!

வறுமைகளை நீக்கி அனைத்து ஐஸ்வரியங்களையும் அளிப்பதில் இந்த அம்மனுக்கு நிகர் இவரே. இந்த அன்னையை வழிபடுவதற்கு தனியாக விரத முறைகள் இருக்கின்றன. பார்வதிதேவியின் பல்வேறு வடிவங்களில் ஒன்று ராஜராஜேஸ்வரி அம்மன். வறுமைகளை நீக்கி அனைத்து ஐஸ்வரியங்களையும் அளிப்பதில் இந்த அம்மனுக்கு நிகர் இவரே.

இந்த அன்னையை வழிபடுவதற்கு தனியாக விரத முறைகள் இருக்கின்றன. ராஜராஜேஸ்வரி அன்னையை ஒரு நல்ல நாளில் தொடங்கி, தொடர்ச்சியாக 48 நாட்கள் விரதம் இருந்து தியானிக்க வேண்டும். இந்த விரத நாட்கள் முழுவதும் பிரம்ம முகூர்த்தம் முடிவதற்கு முன்பாக, அதாவது காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளாக எழுந்து நீராடி அம்மனை வணங்க வேண்டும். ராஜராஜேஸ்வரி அம்மனின் படத்தை பூஜை அறையில் வைத்து, மாலைகள் சூட்டி, தீப, தூப ஆராதனைகள் காட்டி வழிபடலாம்.

இந்த விரத நாட்களில் மாமிசம், மது போன்றவற்றை நீக்கி விடவேண்டும். எந்த வீட்டில் விரதம் இருக்கத் தொடங்குகிறோமோ, அதே வீட்டிலேயே 48 நாட்களும் விரதம் இருக்க வேண்டியது அவசியம். வேறு வீடுகளிலோ, வெளியிலோ சென்று விரதத்தை நிறைவு செய்யக் கூடாது. இரவில் எங்கேயாவது தங்கிவிட்டு வந்தால், விரதம் தடைபட்டுவிடும். மூன்று வேளைகளும் அம்மனுக்கு பூஜை செய்து வணங்க வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால், பில்லி, சூனியம் உள்ளிட்ட மந்திர தந்திரங்கள் எதுவும் நம்மை அண்டாது. விரோதிகளும், துரோகிகளும் விலகுவார்கள். அனைவரும் போற்றக்கூடிய வசிய சக்தி கிடைக்கும். சித்து வேலைகள் கைகூடும். அதிர்ஷ்டத்தையும், ஐஸ்வரியத்தையும் தரும் லட்சுமி தேவி வீட்டின் வாசல் கதவைத் தட்டுவாள். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். அரசனும் பணியும் தகுதி வந்து சேரும்.

The post வறுமைகளை நீக்கி ஐஸ்வரியம் அருளும் ராஜராஜேஸ்வரி அம்மன் விரத வழிபாடு..!! appeared first on Dinakaran.

Related Stories: