கல்லூரி மாணவர் கொலை ஆபாச வீடியோ காட்டி தீர்த்துக்கட்டினேன்: கைதான இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம்

செங்கோட்டை: ஆபாச வீடியோவை காட்டி உல்லாசமாக இருப்போம் என நடித்து தீர்த்துக்கட்டினேன் என்று செங்கோட்டை அருகே கல்லூரி மாணவர் கொலையில் கைதான இளம்பெண் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர் சுண்டங்காட்டு தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் மது என்ற மாடசாமி (20). கல்லூரி மாணவரான இவர், கடந்த அக்டோபர் மாதம் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை மாரிமுத்து இலத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 4ம்தேதி அதே தெருவில் உள்ள லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பராமரிப்பு பணி நடந்தது. அப்போது வீட்டின் செப்டிக் டேங்கில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதோடு மனித எலும்பு கூடு கிடந்தது. தகவல் அறிந்து இலத்தூர் போலீசார் சென்று எலும்பு கூட்டை மீட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் எலும்பு கூடாக கிடந்தவர் காணாமல் போன மது என்பதும், தகாத உறவு காரணமாக அவர், கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. மேலும் இதுதொடர்பாக ஏற்கனவே அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்த பேச்சியம்மாள் என்ற பிரியா (24) மற்றும் அவரது தாய் மாரியம்மாள் (42), சகோதரர் (17 வயது) ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கோவையில் கைது செய்து இலத்தூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

போலீசாரிடம் பிரியா அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்: எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். எனக்கும், உறவுக்காரரான எதிர்வீட்டைச் சேர்ந்த மதுவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் தகாத உறவாக மாறியது. இதனால் மது அடிக்கடி எனது வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்தார். மேலும் நாங்கள் இருவரும் செல்போனில் ஆபாச படம் பார்த்து அதன்படி உல்லாசமாக இருப்போம். நாட்கள் செல்லச் செல்ல மதுவின் தொந்தரவு அதிகமானது. மேலும் நாங்கள் உல்லாசமாக இருந்ததை எனக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து அதனை வைத்து மிரட்டி அடிக்கடி உல்லாசத்திற்கு அழைத்தார். உல்லாசத்திற்கு வரவில்லையென்றால் கணவரின் செல்போனுக்கு அதனை அனுப்பி விடுவதாகவும் கூறினார். இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அதன்படி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மது, இரவு நேரத்தில் எனது வீட்டிற்கு வந்தார். அப்போது அவரிடம் செல்ேபானில் ஆபாச வீடியோவை காண்பித்து அதன்படி இருவரும் உல்லாசமாக இருப்போம் எனக் கூறினேன். இதற்கு மதுவும் சம்மதித்தார்.

அதன்படி அவரை கட்டிலில் படுக்க வைத்து வீட்டில் இருந்த கயிற்றை எடுத்து கை, கால்களை கட்டினேன். அவரும் உல்லாசத்துக்குத்தான் இவ்வாறு செய்கிறார் என நினைத்து எதுவும் சொல்லாமல் அப்படியே இருந்தார். அதன்பிறகு அவரின் அருகில் சென்று உல்லாசமாக இருப்பது போன்று நடித்து திடீரென்று அவரின் கழுத்தை ெநரித்தேன். அதிர்ச்சியடைந்த அவர், சத்தம் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான், அருகில் கிடந்த தலையணையை எடுத்து அவரது முகத்தில் அமுக்கினேன். இதில் சிறிது நேரத்தில் மது துடிதுடித்து இறந்தார். அதன்பிறகு அவரது உடலை எப்படி மறைப்பது என்று யோசித்த நான், அதே பகுதியில் வசித்து வரும் எனது தாய் மாரியம்மாளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கூறினேன். இதனால் பதறித்துடித்த அவர், எனது தம்பியுடன் வீட்டிற்கு வந்தார்.

அதன்பிறகு 3 பேரும் சேர்ந்து மதுவின் உடலை வீட்டின் பின்புறத்தில் உள்ள செப்டிக் டேங்கில் போட்டு மூடிவிட்டோம். பின்னர் வீட்டை காலி செய்து விட்டு ஏற்கனவே கணவர் வேலை பார்த்து வரும் கோவைக்கு சென்று விட்டோம். ஆனால் இதனை எப்படியோ தெரிந்து கொண்ட போலீசார், ேகாவை வந்து எங்களை கைது செய்து விட்டனர்.இவ்வாறு வாக்குமூலத்தில் பிரியா கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் செங்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுனில் ராஜா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் பிரியா, அவரது தாய் மாரியம்மாள் ஆகியோர் கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும், 17 வயது சிறார், பாளை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

The post கல்லூரி மாணவர் கொலை ஆபாச வீடியோ காட்டி தீர்த்துக்கட்டினேன்: கைதான இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Related Stories: