சென்னை: தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தி வருகின்றார். மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள், தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்தர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய தமிழக மாவட்டங்களிலும் தாக்கம் இருக்கும் என தகவல் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் ஒரு ஆலோசனை நடைபெற்று வருகிறது. தென்மேற்கு பருவமழை கேரளா பகுதியில் தற்போது தொடங்கியிருக்கக்கூடிய நிலையில் தென்கிழக்கு பகுதியிலும் தொடங்கருக்கிறது. தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் வருவாய் மற்றும் போரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள், மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுவருகிறது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பருவமழையின் போது ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விவரிக்கப்படுகிறது. மேலும் மீட்பு பணிகளுக்கு தேவையான சாதனங்கள் மாற்று இயந்திரம், வாகனங்கள், மோட்டார் படகுகள், உயர் மின் விளக்குகள், மோட்டார் பம்ப் செட், டீசல், மின்னியற்றி, மணல்மூட்டைகள் ஆகியவற்றை தேவைக்காக தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
The post தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை appeared first on Dinakaran.