மதுரையில் பயங்கரம்: தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்து நகை, பணம் பறிப்பு..மர்ம நபர் அத்துமீறல்..!!

மதுரை: மதுரை சிந்தாமணி அருகே வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்து நகை, பணம் பறிக்கப்பட்டுள்ளது. டாக்டர் சிட்டி பகுதியில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டில் நுழைந்த மர்ம நபர் அத்துமீறி திருட்டில் ஈடுபட்டுள்ளார். பெண்ணிடம் இருந்து 4 சவரன் சங்கிலி, செல்போன், ரூ.4,000 பணம் பறித்துக் கொண்டு மர்ம நபர் தப்பியோடிவிட்டார். மர்ம நபரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post மதுரையில் பயங்கரம்: தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்து நகை, பணம் பறிப்பு..மர்ம நபர் அத்துமீறல்..!! appeared first on Dinakaran.

Related Stories: