திருவாரூர் அருகே கொடூரம் 81 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து சேற்றில் அமுக்கி கொன்ற வாலிபர் கைது-கவரிங் நகைகள் பறிமுதல்

மன்னார்குடி : திருவாரூர் அருகே 81 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து சேற்றில் அமுக்கி கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலம் ஏத்தக்குடி காலனி தெருவை சேர்ந்த மணியன் மனைவி லெட்சுமி (81). இவர்களுக்கு 5 மகள்கள். கணவர் மணியன் இறந்து விட்டதால் அதே பகுதியில் உள்ள 2வது மகள் அன்பரசி வீட்டில் லெட்சுமி வசித்து வந்தார். கடந்த 4ம்தேதி இரவு அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதை பார்க்க சென்ற லெட்சுமி வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

மறுநாள் 5ம் தேதி மாலை அங்குள்ள மாரியம்மன் கோயில் அருகே உள்ள வயல்வெளியில் நிர்வாண நிலையில் லெட்சுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தலையாமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் தனிப்படையினர் குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு சந்தேகத்தின் பேரில் ஏத்தக்குடி அருகே தென்பாதி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மகேந்திரன் மகன் கணபதி (20) என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தியதில், லெட்சுமியை கணபதிதான் கொலை செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இதுபற்றி போலீசார் கூறுகையில், இசை நிகழ்ச்சி முடிந்து லெட்சுமி நள்ளிரவில் வயல்வெளி வழியாக வீடு திரும்பினார். அவர் அணிந்திருந்த நகைக்கு ஆசைப்பட்டு கணபதி அவரை பின் தொடர்ந்து வந்திருக்கிறார். வயல்வெளியில் வைத்து லெட்சுமி அணிந்திருந்த தோடு மற்றும் செயினை பறித்ததுடன், அவரை பலாத்காரம் செய்து அருகேயுள்ள சேற்றில் அமுக்கி கொலை செய்து விட்டு தப்பியுள்ளார். கணபதியிடம் பறிமுதல் செய்த நகைகளை பரிசோதித்த போது அவை கவரிங் என தெரிய வந்தது என்றனர்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கணபதியை கைது செய்தனர். இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளியை விரைந்து பிடித்த தனிப்படை போலீசாரை எஸ்பி சுரேஷ்குமார் பாராட்டினார்.

The post திருவாரூர் அருகே கொடூரம் 81 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து சேற்றில் அமுக்கி கொன்ற வாலிபர் கைது-கவரிங் நகைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: