கரூர்: வீரணம்பட்டி காளியம்மன் கோயிலை பூட்டி சீல் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம், கடவூர் அருகே வீரணம்பட்டி பகுதியில் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஒரு சமூகத்தினர் கோயில் கட்டி சொந்த செலவில் திருவிழா நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்த மக்களில் ஒரு இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த கோயிலுக்குள் செல்ல முற்பட்டபோது அவர்களை வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் சிலர் தடுத்ததால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இது தொடர்பான பிரச்னை முடியும் வரை அந்த கோயிலில் யாரும் வழிபட கூடாது என வருவாய் கோட்டாட்சியர் கோயிலுக்கு சீல் வைத்தார். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒருதலைபட்சமாக எந்த ஒரு விசாரணையும் செய்யாமலும், பேச்சுவார்த்தை நடத்தாமலும் கோட்டாட்சியர் கோயிலுக்கு சீல் வைத்ததாக அவரை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரும்பான்மை மக்கல், சிறுபான்மை மக்கள் என்ற பேச்சுவார்த்தை நடத்தாமல் ஒருதலைப்பட்சமாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறை செயல்பட்டு கோயிலை பூட்டி சீல் வைத்ததை கண்டித்து பாளையம் – திருச்சி சாலையில் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.
The post வீரணம்பட்டி அருகே கோயிலை பூட்டி சீல் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல் appeared first on Dinakaran.