காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை மீது தாக்குதல்

சமயபுரம், ஜூன் 9: மண்ணச்சநல்லூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட புதுமாப்பிள்ளை மற்றும் உறவினர்களை தாக்கிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்தனர். மண்ணச்சநல்லூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஹர்ஷவர்தன் (24). மண்ணச்சநல்லூர் அருகே சோழங்கநல்லூர் குடித்தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (42). இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவார்கள். விஜயகுமாரின் அண்ணன் மகளை ஹர்ஷவர்தன் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதில் பெண் வீட்டாருக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது.

இரு குடும்பத்தினருக்கும் எந்தவித பேச்சுவார்த்தையும் கிடையாது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஹர்சவர்தன் தனது மனைவியை அழைத்துக் கொண்டு சோழங்கநல்லூரில் உள்ள தனது சித்தியை பார்ப்பதற்காக இருவரும் சென்றனர். அங்கு ஹர்சவர்தன், அவரது உறவினர்களான ெஜயலட்சுமி, சத்தியபாமா, வினோத் காம்ளி ஆகியோருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், தர்மராஜ், கங்காதரன் மற்றும் மேல சிந்தாமணி காவேரிநகரைச் சேர்ந்த பார்த்திபன் ஆகியோருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் எதிர்தரப்பினர் இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கியதில் காயமடைந்த ஹர்ஷவர்தன் மற்றும் உறவினர்கள் ரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ஹர்சவர்தன் வாத்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விஜயகுமார், பார்த்திபன், தர்மராஜ், கங்காதரன் ஆகிய நான்கு பேர்மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் விஜயகுமார், தர்மராஜ் இருவரை கைது செய்து, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: