வியாபாரத்திற்கு செல்ல தயாராகும் கடலை பாமர மக்களிடம் பணம் மோசடி செய்தோர் மீது கடும் நடவடிக்கை

பெரம்பலூர், ஜூன் 9: பாமர மக்களின் முதலீட்டு பணத்திற்கு அதிக வட்டி தருவதாக, ஆசைகாட்டி மோசடி செய்யும் நிதி நிறுவனங்கள் மீது, தமிழக அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெரம்பலூர் தொகுதி எம்எபி டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெ ளியிட்டுள்ள அறிக்கை:
பெரம்பலூரில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாமர மக்கள் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக காவல் துறையிடம் புகார்கள் அளித்துள்ளனர். முதல் சில மாதங்களில் அதிக வட்டி கொடுத்துவிட்டு, பின்னர் மொத்த பணத்தையும் சுருட்டிக்கொண்டு அந்நிறுவனத்தார் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் தலைமறைவாகி உள்ள நபர்களை கைதுசெய்வதோடு, அவரது சொத்துக்களை பறிமுதல் செய்தும் – அவர்களிடமுள்ள பணத்தை மீட்டும், பணத்தை இழந்து தவிக்கும் ஏழை மக்களிடம் திரும்ப வழங்க வேண்டும். தமிழக அரசும் இதுபோன்ற நிதி நிறுவன மோசடிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, காவல்துறையின் மூலமாக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

The post வியாபாரத்திற்கு செல்ல தயாராகும் கடலை பாமர மக்களிடம் பணம் மோசடி செய்தோர் மீது கடும் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: