அகரம்சீகூரில் கள்ளத்தனமாக விற்க பதுக்கிய 98 மது பாட்டில்கள் பறிமுதல்

குன்னம், ஜூன் 9: பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு குன்னம் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்செல்வி தலைமையில் போலீசார் அகரம்சீகூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது டாஸ்மாக் கடை அருகே உள்ள கட்டிடத்தில் பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு போலீசார் சென்றதும், மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டிருந்தவர் தப்பி ஓடிவிட்டார். மதுவிலக்கு போலீசார் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மொத்தம் 98 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் தப்பி ஓடிய நபர் குறித்து விசாரணை செய்ததில், அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த மாயவன் மகன் வெங்கடாசலம் என தெரியவந்தது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.

The post அகரம்சீகூரில் கள்ளத்தனமாக விற்க பதுக்கிய 98 மது பாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: