பெரம்பலூர் மாவட்டத்தில் விளம்பர தட்டி வைக்க மரங்களில் ஆணி அடித்தால் கடும் நடவடிக்கை

பெரம்பலூர், ஜூன் 9: பெரம்பலூர் மாவட்டத்தில் சாலையோர மரங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஆ ணியடித்து விளம்பரங்கள் செய்யும் நபர்கள், நிறுவனத்தினர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட கலெக்டர் கற்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பேரூராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் தேசிய, மாநில நெடுஞ்சா லைகளுக்கு சொந்தமான பொது இடங்கள் மற்றும் சாலையின் இருபுறங்களிலும் அமைந்துள்ள மரங்களில் தனியார் நிறுவனங்கள், அமைப்புகள், தனி நபர்கள் சார்பில் அரசு அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றிகொள்ளவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற விளம்பர பதா கைகளை மரங்களில் அமைக்கக் கூடாது எனவும் இதன் மூலம் தெரிவிக்கப் படுகிறது. தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள், தனிநபர்கள் மீது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் திருத்த சட்டம் – 2023 பிரிவு 117-K to 117-U-ன் கீழ் நடவடிக் கை மேற்கொள்ளப்படும் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் விளம்பர தட்டி வைக்க மரங்களில் ஆணி அடித்தால் கடும் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: