உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வேதாரண்யம் கடற்கரையில் மெகா தூய்மை பணி

வேதாரண்யம்,ஜூன்9: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வேதாரண்யம் கடற்கரையில் மெகா தூய்மை பணி நடந்தது. வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா மற்றும் தஞ்சை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி ஆகியோரின் உத்தரவின்படி வேதாரண்யம் நகராட்சி பகுதியில் மக்கள் தூய்மை இயக்கம் ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டும், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இதே போல் நேற்று வேதாரண்யம் சன்னதி கடல் பகுதியில் உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு தூய்மை பணி நடைபெற்றது.

கடற்கரையில் குளிப்பதற்காக வரும் பொது மக்கள், அவர்கள் விட்டு சென்ற ஆடைகள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை நகராட்சி பணியாளர்கள் சேகரித்து குப்பை கிடங்குக்கு அனுப்பி வைத்தனர். பின்பு நகர மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம் மற்றும் நகராட்சி பணியாளர்கள், தூய்மை பணி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் மங்களநாயகி, நகர் மன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பொது இடங்களில் தூய்மை செய்யும் நோக்கில் கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு கடற்கரை மற்றும் கடற்கரைக்கு செல்லும் சாலை உள்ளிட்ட இடங்கள் மெகா தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் குப்பைகளை கண்ட இடங்களில் போடக்கூடாது எனவும் அறிவுரை வழங்கப்பட்டு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

The post உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வேதாரண்யம் கடற்கரையில் மெகா தூய்மை பணி appeared first on Dinakaran.

Related Stories: