ஆவடி: திருவள்ளூர் மாவட்டத்தில்,திட்ட குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைப்பெறும் என, மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல் ஜூன் 23 ல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை வரை நடைபெற உள்ளது. வேட்பு மனுக்கள் பரிசீலனை 12ம் தேதியும், திரும்ப பெற 14ம் தேதி கடைசி நாள். தேர்தல் முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை நடைப்பெறும் என கூறப்பட்டுள்ளது.
தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான முதல் கூட்டம் ஜூன் 28ல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் அதற்கான வேட்பு மனுவை மாநகராட்சி அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம் என நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் கமிஷனர் தர்பக்கராஜ் தெரிவித்தார்.
The post திருவள்ளூர் மாவட்டத்தில் திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல்: மாநகராட்சி ஆணையர் தகவல் appeared first on Dinakaran.