செல்போனில் பேசியபடி நடந்தபோது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த சிறுமி சாவு

பூந்தமல்லி: வளசரவாக்கம், எஸ்.வி.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் சவுமியா (17). இவர் பிளஸ் 2 முடித்துவிட்டு, இந்த ஆண்டு கல்லூரியில் சேருவதற்காக முயற்சித்து கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதுரவாயல், அலங்கார் நகரில் வசிக்கும் மூத்த சகோதரியின் வீட்டுக்கு சவுமியா சென்றுள்ளார். அங்கு இருவரும் காற்று வாங்குவதற்காக மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர். அப்போது, செல்போனில் பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்த சவுமியா, திடீரென கால் தவறி மொட்டை மாடியிலிருந்து கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சவுமியா பரிதாபமாக இறந்தார்.

The post செல்போனில் பேசியபடி நடந்தபோது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த சிறுமி சாவு appeared first on Dinakaran.

Related Stories: