நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 லட்சம் மோசடி: காதல் ஜோடி கைது

புழல்: நிதி நிறுவனம் நடத்தி, லட்சக்கணக்கில் பண மோசடி செய்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர். புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(35). இவருடைய காதலி பிரவீனா(28). இருவரும் கன்னியாகுமாரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் புழல் விநாயகபுரம் பகுதியில் ஆன்லைன் மூலம் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இதில் விநாயகபுரம், லட்சுமிபுரம், கொளத்தூர், கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 25க்கும் மேற்பட்டோர் இணைந்து ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

இதில் பணம் செலுத்தியவர்களுக்கு முதிர் காலம் முடிந்தும், பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததாக தெரிகிறது. வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட பணத்தின் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டினத்தில் உள்ள  குமரன் நகரில் ரூபாய் ஒரு கோடிக்கு இவர்கள் ஆடம்பர வீடு கட்டி அதில் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்தனர். இதை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் புழல் போலீசில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்தனர்.

இதுதொடர்பாக, புழல் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கன்னியாகுமரிக்கு சென்று காதல் ஜோடி காந்த், பிரவீனா ஆகியோரை கைது செய்து புழல் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், ரூ.50 லட்சம் வரை இவர்கள் ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. இது குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

The post நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 லட்சம் மோசடி: காதல் ஜோடி கைது appeared first on Dinakaran.

Related Stories: