போதுமான பயணிகள் இல்லாததால் 6 விமானம் ரத்து

சென்னை: சென்னை விமானநிலையத்தில் நேற்று காலை முதல் போதுமான பயணிகள் இல்லாததால் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை விமானநிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 5.15 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 3.40 மணிக்கு, ஷீரடி செல்லும் தனியார் விமானம், மாலை 4.05 மணிக்கு இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதேபோல் திருவனந்தபுரத்திலிருந்து காலை 8.35 மணிக்கு சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 3.05 மணிக்கு கொழும்பில் இருந்து சென்னை வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 6.45 மணிக்கு ஷீரடியில் இருந்து, சென்னை வரும் தனியார் விமானம் என மொத்தம் 6 விமானங்களின் சேவைகள் நேற்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டு உள்ளன. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்துவிட்டதால், தற்போது விமானப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. எனவே, மேற்கண்ட விமானங்களில் பயணம் செய்வதற்கு மிகக் குறைந்த பயணிகளே முன்பதிவு செய்திருந்தனர். இதனால் போதிய பயணிகள் இன்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post போதுமான பயணிகள் இல்லாததால் 6 விமானம் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: