கண்ணூர் விமான நிலையத்தில் சாக்சுக்குள் மறைத்து ₹1.10 கோடி தங்கம் கடத்தல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையத்தில் சாக்சுக்குள் மறைத்து ₹1.10 கோடி தங்கத்தை கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். துபாயில் இருந்து கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இதில் 2 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அதிகாரிகள் 2 பேரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது 2 பேரும் காலில் அணிந்திருந்த சாக்சுக்குள் தங்கத்தை பசை வடிவிலாக்கி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. உடனே அவர்களிடம் இருந்து 1797 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் மதிப்பு ₹1.10 கோடியாகும். விசாரணையில் அவர்களில் ஒருவர் காசர்கோட்டை சேர்ந்த முகமது அல்தாப், இன்னொருவர் கண்ணூர் மாவட்டம் பையனூரை சேர்ந்த முகமது பஷீர் என்பது தெரியவந்தது. 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதே போல கோழிக்கோடு விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்திய ₹1.25 கோடி மதிப்பு உள்ள தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post கண்ணூர் விமான நிலையத்தில் சாக்சுக்குள் மறைத்து ₹1.10 கோடி தங்கம் கடத்தல் appeared first on Dinakaran.

Related Stories: