தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பஜார் வீதியில் தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சமூக ஆர்வலர் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார். உத்திரமேரூர் பஜார் வீதியில் தேர்தலில் ஜனநாயக முறைப்படி அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சமூக ஆர்வலர் கருப்பையா சைக்கிளில் சுற்று பயணம் மேற்கொண்டு துண்டு பிரசுரங்கள் வழங்கி, விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின்போது, தேர்தலில் போட்டியிடுபவர்கள் கட்டாயம் ஆங்கில மொழி பேசத் தெரிந்திருக்க வேண்டும், இயற்கை வளங்கள் பாதுகாப்பு, நீர், நிலம், விவசாயம், சுகாதாரம், மருத்துவம், நவீன தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்தவர்கள் மட்டுமே வேட்பாளராக இருக்க வேண்டும்.

மேலும், செல்போன் மூலம் வாக்களிக்கும் முறையை கொண்டு வர வேண்டும், நோட்டா வாக்குகளை விட குறைவாக வாக்குகள் பெற்றிருக்கும் வேட்பாளர்கள் மறு தேர்தலுக்கு போட்டியிட அனுமதிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரசாரம் மூலமும் துண்டு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை சமூக ஆர்வலர் கருப்பையா ஓசூரில் துவங்கி சைக்கிள் மூலம், பல்வேறு கிராமங்களுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு இறுதியாக உத்திரமேரூர் வந்தடைந்து பிரச்சாரத்தை முடித்தார்.
இந்த பிரச்சாரமானது சைக்கிள் மூலம் ஆயிரம் கிலோமீட்டர் வரை பிரச்சாரம் செய்துள்ளார். முன்னதாக உத்திரமேரூரில் பிரசித்தி பெற்ற குட ஓலை முறை கல்வெட்டு கோயிலில் சென்று கல்வெட்டுகளை பார்வையிட்டார். நிகழ்வின்போது சமூக ஆர்வலர் நாகராஜ், முனுசாமி, கண்ணுகுட்டி உட்பட பலர் பங்கேற்றனர். தேர்தல் கட்டாயம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களுக்கு உத்திரமேரூர் ரோட்டரி சங்கம் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

The post தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: