குளித்தலை அருகே வீரணம்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு சீல்!

விழுப்புரம்: குளித்தலை அருகே பட்டியல் சமூக இளைஞருக்கு கோயிலில் அனுமதி மறுத்ததாக எழுந்த புகாரை அடுத்து கோயிலுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியம் மேல்பாதி கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு இந்த ஆண்டு திருவிழாவின்போது சென்ற தலித் இளைஞர் கதிரவன் என்பவர் கடுமையாக தாக்கப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த நிலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

அத்துடன் மேல்பாதி அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் வழிபடுவதற்கு இந்து ஆதிதிராவிடர் சமூகத்தினரை அனுமதிக்காதது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை சுமுகமாக முடிப்பதற்காக மயிலம், விக்கிரவாண்டி ,விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர்களும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஆட்சியர் காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளீட்ட அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை. எங்கே ஜாதிக் கலவரமாக மாறி, பொது அமைதிக்கு ஊறுவிளைவித்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக தீவிரமாக மாறிவிடுமோ என்று கருதிய இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அக்கோவிலை ‘சீல்’ வைத்து மூடிவிட்டனர். இந்த பிரச்சனை மறைவதற்குள், குளித்தலை அருகே வீரணம்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கோயில் திருவிழாவுக்கு வந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த இளைஞரை மற்றொரு சமூகத்தினர் தடுத்ததாக புகார் எழுந்துள்ளது. சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் குறிப்பிட்ட சமூகத்தினர் உடன் படாததால் கோட்டாட்சியர் புஷ்பா தேவி தலைமையிலான வருவாய்த்துறையினர் கோயிலுக்கு சீல் வைத்தனர். சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டததால் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் அவர்களிடம் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post குளித்தலை அருகே வீரணம்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு சீல்! appeared first on Dinakaran.

Related Stories: