நாடு முழுவதும் புதிதாக 50 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஒன்றிய அரசு அனுமதி!

டெல்லி: நாடு முழுவதும் புதிதாக 50 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. அதிகபட்சமாக தெலுங்கானாவில் 13 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 30 அரசு மற்றும் 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. புதிய கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததன் மூலம் நாடு முழுவதும் – மருத்துவப் படிப்புக்கான இடங்கள் 8,195 அதிகரிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் வரும் கல்வியாண்டில் 8,195 மருத்துவ படிப்பு இடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகளை சேர்த்து நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 702 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ பட்டப் படிப்புக்கான (எம்.பி.பி.எஸ்.) இடங்களின் எண்ணிக்கையும் 1,07,658 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 3 தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை பி.எஸ்.பி. மருத்துவ ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்வி -நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள நந்தா மருத்துவக் கல்லூரியில் -மாணவர் சேர்க்கை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post நாடு முழுவதும் புதிதாக 50 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஒன்றிய அரசு அனுமதி! appeared first on Dinakaran.

Related Stories: