ராமானுஜர் திருமேனியில் ஆழ்வார்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

* தலை: நம்மாழ்வார்; அவரை சேவித்தால் கிருஷ்ண பக்தி பெருகும்.
* முகம்: நாதமுனிகள்; நாலாயிரம், இயல் இசை நாடகம் கிடைக்கும்.
* கண்: உய்யக்கொண்டான்; நாதமுனி களின் சிஷ்யர், நல்வழி கிடைக்கும்.
* இரண்டு கன்னங்கள்: மணக்கால்நம்பி; கல்வி வரங்கள் கிடைக்கும்.
* திருமரு: ஆளவந்தார்; ஆச்சார்ய கடாட்சம் கிட்டும்.

* திருக்கழுத்து: பெரியநம்பிகள்; த்வய மகா மந்திரம் கிடைக்கும்.
* இரண்டு கைகள்: திருகோஷ்டியூர்நம்பி; திருமந்திரம், ச்ரமஸ்லோகம் கிடைக்கும்.
* இரண்டு மார்புகள்: திருமலை நம்பிகள்; பகவத் கைங்கர்யம், தீர்த்த கைங்கர்யம் கிட்டும்.
* திருவயிறு: ஆழ்வார் திருவரங்கப் பெருமான்; அரையர் ஆச்சார்ய பரகத ஸ்ரீரீகாரம் கிட்டும்.
* திருமுதுகு: திருமாலை ஆண்டான்; திருவாய் மொழி கிட்டும்.

* இடுப்பு: திருக்கச்சி நம்பிகள்; ஆச்சார்ய உத்திஷ்டம் கிட்டும்.
* இடுப்பின் பின்புறம்: எம்பார்; வைராக்யம் கிட்டும்.
* இரண்டு கணுக்கால்கள்: பராசரபட்டர்; வேதாந்த சாஸ்திர ஞானம் கிட்டும்.
* இரண்டு முழங்கால்கள்: வடக்குத்திருவீதிப் பிள்ளை; வீடு கட்டும் யோகம் கிட்டும்.
* திருவடி தாமரை: பிள்ளை லோகாச்சார்யர்; பெருமாளை ரட்சிக்கின்ற பாக்யம் கிட்டும்.
* திருவடி ரேகை: திருவாய் மொழிப்பிள்ளை; திருவாய்மொழி கிட்டும்.

* பாதுகை: மணவாள மாமுனிகள்; வ்யாக்யானம் கிட்டும்.
* திருமண்காப்பு: சேனை முதலியார்; எடுத்த கார்யம் வெற்றியடையும்.
* பூணூல்: கூரத்தாழ்வான்; ஆச்சார்ய ப்ரமாதாக்கள் ரட்சிக்கின்ற பாக்யம் கிட்டும்.
* திரிதண்டம்: முதலியாண்டான்; திவ்ய தேச கைங்கர்யம் கிட்டும்.

* காஷாயம்: வடுக நம்பி; ஆச்சார்ய அபிமானம் கிட்டும்.
* தாமரை, துளசி, மணிமாலைகள்: திருக் குருகைப்பிரான்பிள்ளை; வைகுந்தம் கிடைக்கும்.
* சாயா(நிழல்): பிள்ளை உறங்காவில்லி தாசர்; பெருமாளுக்கு உகந்த கைங்கர்யம் கிட்டும்.
ராமானுஜரையும், ஆழ்வார்களையும் தியானம் செய்தால், பெருமாள் நம்மைப் பார்த்து சிரிப்பார், சந்தோஷப்படுவார்.

தொகுப்பு: நாகலட்சுமி

The post ராமானுஜர் திருமேனியில் ஆழ்வார்கள்! appeared first on Dinakaran.

Related Stories: