இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்க வலியுறுத்தல்: மாணவர் கூட்டமைப்பினர் நடத்திய பேரணி வன்முறையில் முடிந்தது

இலங்கை: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்க வலியுறுத்தி மாணவர் சங்கத்தினர் பேரணி வன்முறையில் முடிந்தது. கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கையில் ராஜபக்க்ஷேவுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிக பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி மாணவர் கூட்டமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் தலைநகர் கொழும்புவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்க வேண்டும்.

சுகாதாரம் மற்றும் கல்விக்கு நிதி ஒதுக்கீடு குறைத்ததை கண்டித்தும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100 கணக்கான மாணவர்கள் பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது பேரணியை தடுக்க முயன்ற போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. மாணவர்களை தடியடி நடத்தியும், தண்ணீர் பீய்ச்சியடித்தும் காவல்துறையினர் விரட்டியடிக்க முயன்றனர். இதனை அடுத்து காவல்துறையினர் மீது மாணவர்கள் கற்களை வீசி தாக்கினர். காவல்துறையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே நடந்த இந்த வன்முறையால் கொழும்பு நகரமே போர்க்களம் போல் காட்சியளித்தது. மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

The post இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்க வலியுறுத்தல்: மாணவர் கூட்டமைப்பினர் நடத்திய பேரணி வன்முறையில் முடிந்தது appeared first on Dinakaran.

Related Stories: