திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா: அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ்பொய்யாமொழி பங்கேற்பு

திருச்சி, ஜூன் 8: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் மாற்றுத்திறனாளிகள் உள்பட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.50.10 லட்சத்தில் 60 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்குதல், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளுக்கும் ரூ.47.19 லட்சத்தில் குப்பை அள்ளும் வாகனங்கள் வழங்குதல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மண்ணச்சநல்லூர் அடுத்த பாளையூரில் பாம்பு கடித்து இறந்த தங்கம்மாள் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் அரசின் நிவாரண நிதி வழங்குதல், கலெக்டர் அலுவலகத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரூ.4.80 லட்சத்தில் வாங்கப்பட்ட பேட்டரி வாகனத்தை பயன்பாட்டுக்கு இயக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை வகித்தார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் ேக.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கிறிஸ்தவ மகளிர் உதவி சங்கத்துக்கு ரூ.5.25 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கினர்.

இந்த விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்பட அரசு அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா: அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ்பொய்யாமொழி பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: