மாவட்ட எஸ்பி அலுவலக சிறுப்பு மனு முகாமில் 31 மனுக்கள் வரப்பெற்றன

பெரம்பலூர், ஜூன் 8: பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி மதியழகன் தலைமையில் மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் நடந்த சிறப்பு மனு முகாமில் 31மனுக்கள் பெறப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தர வின்படி மாவட்ட ஏடிஎஸ்பி (தலைமையிடம்)மதியழகன் தலைமையில் நேற்று (7ம்தேதி) மாவட்ட எஸ்பி காவல் அலுவலகத்தில் சிற ப்பு மனு முகாம் நடைபெற் றது. இந்த சிறப்பு மனுமுகா மில் கலந்து கொண்ட ஏடி எஸ்பி மதியழகன் பொது மக்களிடம் மனுக்களை பெற் று விசாரணை நடத்தினார். இந்த சிறப்பு மனு முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், பாடா லூர், மங்களமேடு, அரும்பா வூர், மருவத்தூர், வி.களத் தூர், கை.களத்தூர், பெரம் பலூர், மங்களமேடு அனை த்து மகளிர் காவல் நிலை யங்கள்,மாவட்ட மதுவிலக் கு உள்ளிட்ட அனைத்து கா வல் நிலையம் மற்றும் சிற ப்பு பிரிவு காவல்துறையி னர் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 31 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 6 மனுக்கள் முடித்து வைக்கபட்டு மீதமு ள்ள 25 மனுக்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொ ள்ள அனுப்பி வைக்கப்பட் டுள்ளது.
மேலும் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை மாவட்ட எஸ் பி அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்று வருகிறது. பொது மக்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மனு விசாரணை முகாமில் கலந் து கொள்ள வருபவர்கள் மாவட்ட காவல் அலுவலகம் வருவதற்கு ஏதுவாக மாவ ட்ட காவல்துறை சார்பாக பாலக்கரையிலிருந்து கா வல் அலுவலகத்திற்கும் மீ ண்டும் காவல் அலுவலகத் திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்ல பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என ஏடிஎஸ்பி மதியழகன் தெரிவித்துள்ளார்.

The post மாவட்ட எஸ்பி அலுவலக சிறுப்பு மனு முகாமில் 31 மனுக்கள் வரப்பெற்றன appeared first on Dinakaran.

Related Stories: