பாலம் கட்டும் பணி எப்போது முடியும்?.. தீவன பயிர்கள் உற்பத்தி செய்ய ஏக்கருக்கு ரூ.3,000 மானியம்

ஈரோடு: தீவன பயிர்கள் உற்பத்தி செய்வதற்கு கால்நடைத்துறை சார்பில் ரூ.3 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, கலெக்டர் ராஜகோபால் சுங்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாய தோட்டங்கள் அல்லது தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக கால்நடைகளுக்கு ஏதுவான தீவன பயிர்களை பயிரிடலாம். குறிப்பாக, தானிய பயிர்கள், புல் வகைகள், பருப்பு வகை பயிர்களை பயிரிடும் திட்டம் 110 ஏக்கரில் செயல்படுத்தப்படுகிறது. தீவன பயிர் உற்பத்தி செய்ய நிலத்தை தயார் செய்தல், பயிரிட தேவையான விதைகள், நாற்றுகள் வாங்க மானியமாக தலா ஒரு ஏக்கருக்கு ரூ. 3,000 வழங்கப்படுகிறது. தரச்சான்று பெற்ற தீவன விதைகள் மற்றும் நல்ல தரமுள்ள நாற்றுகளுக்கே மானியம் வழங்கப்படும்.

ஒரு பயனாளிக்கு அரை ஏக்கர் அல்லது அதிகப்பட்சம் ஒரு ஹெக்டேருக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும். சிறு, குறு, பெண், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கும், நிலம் இல்லாத கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கும், அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட தீவனத்தை குறைந்த விலைக்கு வழங்க விரும்பும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 94450 32515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், வரும் 20க்குள் அந்தந்த பகுதி கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பாலம் கட்டும் பணி எப்போது முடியும்?.. தீவன பயிர்கள் உற்பத்தி செய்ய ஏக்கருக்கு ரூ.3,000 மானியம் appeared first on Dinakaran.

Related Stories: