வழிபாட்டு தலங்கள் இடிப்பை தடுக்க அமெரிக்காவில் இந்திய வம்சாவளி எம்பி மசோதா தாக்கல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் வழிபாட்டு தலங்களை இடிப்பதை வெறுக்கத்தக்க குற்றங்கள் பட்டியலில் சேர்க்கும்படி, இந்திய வம்சாவளி எம்பி மசோதா தாக்கல் செய்துள்ளார். அமெரிக்காவில் மிச்சிகன் தொகுதியின் குடியரசு கட்சி எம்பி.யாக இருப்பவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரஞ்சீவ் புரி. இவர் கடந்த 1970ம் ஆண்டு பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸில் இருந்து அமெரிக்கா சென்று குடியேறினார். தற்போது இவர் மிச்சிகன் குடியரசு கட்சியின் கொறடாவாகவும் இருந்து வருகிறார்.

இவர் தீபாவளி, வைகாசி விசாகம், ரம்ஜான், பக்ரீத், சீன புத்தாண்டு ஆகிய தினங்களுக்கு மிச்சிகன் மாகாணத்துக்கு அரசு விடுமுறை அளிக்க மசோதாக்களை தாக்கல் செய்து அவற்றை நிறைவேற்றி உள்ளார். இந்நிலையில், அவர் மிச்சிகனில் வழிபாட்டு தலங்களை இடிப்பதை வெறுக்கத்தக்க குற்றங்களின் பட்டியலில் சேர்க்கும்படி மசோதா தாக்கல் செய்துள்ளார். மிச்சிகன் வெறுக்கத்தக்க குற்றங்கள் 1988 சட்டத்தில் இதுவரை திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது 35 ஆண்டுகளாகும் நிலையில், அவற்றில் நிறைய குற்றங்கள் சேர்க்கப்பட வேண்டியுள்ளன என்று ரஞ்சீவ் புரி தெரிவித்தார்.

அவர் மேலும், ‘’கோயில்கள், மசூதிகள், குருத்வாராக்கள் போன்ற புனித தலங்களை இடித்து சேதப்படுத்துவோர் மீது இனி எளிதாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்,’’ என்று தெரிவித்தார்.

The post வழிபாட்டு தலங்கள் இடிப்பை தடுக்க அமெரிக்காவில் இந்திய வம்சாவளி எம்பி மசோதா தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: