இங்கி. மக்களின் உடல் பருமனை குறைக்க திட்டம்: பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி வைத்தார்

லண்டன்: இங்கிலாந்தில் தேசிய சுகாதார சேவை தரவுகளின்படி உடல்பருமன் காரணமாக இதய நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது. இதனால், அதிக நோயாளிகளை சமாளிக்க முடியாமல் தேசிய சுகாதார சேவை அமைப்பு தடுமாறுகிறது. இந்நிலையில் உடல் பருமனை குறைக்கும் மருந்துகளை மருத்துவமனைக்கு வெளியேயும் வழங்கும் வகையில் 2 ஆண்டு சோதனை திட்டத்தை இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

உடல் பருமனுக்கு எதிரான மருந்துகளை வழங்கும் வகையிலான 2 ஆண்டு சோதனை திட்டத்தை அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் நேற்று தொடங்கி வைத்தார். 40மில்லியன் பவுண்ட் மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தொடர்ந்து பேசிய பிரதமர் ரிஷி சுனக், ‘‘உடல் பருமன் தேசிய சுகாதார சேவை மீது மிகுந்த அழுத்தத்தை உருவாக்குகிறது. உடல் எடையை குறைக்க மக்களுக்கு உதவும் வகையில் சமீபத்திய மருந்துகளை பயன்படுத்துவதன் மூலமாக, உடல் பருமனால் ஏற்படும் உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களை தவிர்த்து மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உதவ முடியும்” என்றார்.

The post இங்கி. மக்களின் உடல் பருமனை குறைக்க திட்டம்: பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: