12 ஆண்டுகளாக நீடிக்கும் பாரம்பரியம் பிரதமர் மோடிக்கு மாம்பழம் அனுப்பி வைத்த மம்தா

கொல்கத்தா: 

பிரதமர் மோடிக்கு 12 ஆண்டு பாரம்பரியப்படி மேற்குவங்க முதல்வர் மம்தா மாம்பழம் அனுப்பி வைத்தார். பிரதமர் மோடியும், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசுவதும், அறிக்கை வெளியிடுவதும் உண்டு. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் விளையும் அதிக ருசிக்கொண்ட மாம்பழ வகைகளை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைப்பது வழக்கமாகும். 12 ஆண்டுகளாக பிரதமர் அலுவலகத்துக்கு மாம்பழம் அனுப்புவதை மம்தா பானர்ஜி மறக்காமல் செய்து வருகிறார்.

அந்த வகையில் இந்த ஆண்டு நேற்று அவர் பிரதமர் மோடிக்கு மாம்பழம் பரிசு அனுப்பி வைத்தார். 4 கிலோ எடை கொண்ட பெட்டியில் மாம்பழங்கள் கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பிரதமர் மோடிக்கு இந்த ஆண்டு மம்தா பானர்ஜி ஹிம்சாகர், பஸ்லி, லட்சுமண் பாக் 3 வகையான மாம்பழங்களை பரிசாக அனுப்பி உள்ளார். இதே போல ஜனாதிபதி திரவுபதி முர்மு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஆகியோருக்கும் மம்தா பானர்ஜி இந்த ஆண்டு மாம்பழ பெட்டிகளை பரிசாக அனுப்பி உள்ளார்.

The post 12 ஆண்டுகளாக நீடிக்கும் பாரம்பரியம் பிரதமர் மோடிக்கு மாம்பழம் அனுப்பி வைத்த மம்தா appeared first on Dinakaran.

Related Stories: