போச்சம்பள்ளி தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் 103 மனுக்களுக்கு தீர்வு

போச்சம்பள்ளி, ஜூன் 8: போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்தில், மத்தூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட பட்ரஅள்ளி, சோனாரஅள்ளி, கொண்டிரெட்டிப்பட்டி, கடப்பசந்தம்பட்டி, ஆலேரஅள்ளி, மாதிநாயக்கன்பட்டி, பெத்தம்பட்டி மற்றும் நாகரசம்பட்டி உள்வட்டத்திற்குட்ட காட்டகரம், மாகாதேவகொல்லஅள்ளி ஆகிய கிராமங்களுக்கான 1432 ஆம் ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாந்தி), கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடைபெற்றது. அதன்படி, மூன்றாம் நாள் (நேற்று) நிகழ்ச்சியில் 2 வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட பொது மக்களிடம் இருந்து முதியோர் உதவி தொகை, பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா, கணினி திருத்தம் தொடர்பாக, ஆக்கிரமிப்பு தொடர்பாக இதர துறை மனுக்கள் என மொத்தம் 103 மனுக்கள் வந்தது.

இதில் தகுதியான மனுக்கள் மீது, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து, பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், தகுதியான மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக தீர்வு காணப்படும் என கலெக்டர் சரயு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குனர் சேகரன், தாசில்தார் தேன்மொழி, கலெக்டரின் அலுவலக மேலாளர் ராமச்சந்திரன், பி,ஆர்.ஓ. மோகன், தனி தாசில்தார் கங்கை, நில அளவை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை தாசில்தார் சகாதேவன், பிரபாவதி, ஆர்.ஐ.க்கள் பிரபா, லதா, பிடிஓ மகேஸ்குமார் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post போச்சம்பள்ளி தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் 103 மனுக்களுக்கு தீர்வு appeared first on Dinakaran.

Related Stories: